காரியாபட்டி அருகே பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா

*ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புகாரியாபட்டி : காரியாபட்டி அருகே பெரிய கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நேற்று 12 ஆண்டுகளுக்கு பின் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடந்தது. சுமார் 1,440 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாயில் மீன்பிடி திருவிழாவை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மந்திரி ஓடை கண்ணன் துவக்கி வைத்தார். மந்திரிஓடை, சின்ன கம்பிக்குடி, பெரிய கம்பிக்குடி, ஆவியூர், அரசகுளம், ஆலங்குளம், அச்சங்குளம் என சுற்றுவட்டாரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஜாதி, மதம் பாராமல் ஒன்று கூடி மீன்பிடி திருவிழாவில் மீன் பிடித்தனர். முன்னதாக கம்பிக்குடி கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி சாமி கும்பிட்டு பூஜை செய்தனர். வலைகளில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, தேன் கெழுத்தி ஆகிய மீன்கள் கிடைத்தன. குறிப்பாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை உள்ள பெரிய வகை மீன்களும் கிடைத்தன….

The post காரியாபட்டி அருகே பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: