×

துலாம்

துலாம்: ஏற்ற இறக்கம், நிறை குறைகள் உள்ள நேரம். சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் மனதில் இனம் புரியாத கலக்கம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் திடீர் பயணமாக சொந்த ஊர் வருவார்கள். புதன் பலமாக இருப்பதால் எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து விடுவீர்கள்.மாமனார் மூலம் மகிழ்ச்சி உதவிகள் கிடைக்கும். ராகு, கேது இருவரின் அமைப்பு காரணமாக எதிர் பார்த்த பணம் வசூலாகும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடக்கும். கடன், பாக்கிகள் வசூலாகும். போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று உங்களுக்கு சாதகமாக வீசும்.

பரிகாரம்: பைரவரை பூஜியுங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவலாம்.

Tags :
× RELATED துலாம்