மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பு கண்காட்சி

மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது குறித்த கண்காட்சி, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் அதனை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினம் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், அப்பள்ளி மாணவ, மாணவிகளின் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், பூனை, ஆடு, கோழி, முயல் என உள்பட பல்வேறு வகையான பறவைகள், மீன்கள் ஆகியவற்றை கொண்டு வந்து மற்ற மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினர். மேலும், எந்தெந்த செல்லப் பிராணிகள், எந்த வகையான உணவுகள் உட்கொள்ளும், பிராணிகளை எவ்வாறு கையாளுவது, அதனை எப்படி எவ்வாறு பராமரிப்பது என மாணவ, மாணவிகள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு செல்லப் பிராணிகளை கண்டுகளித்து மகிழ்ந்தனர்….

The post மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பு கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: