சிம்மம்

5ல் சனி, கேது, குரு மூவரும் கூட்டு சேர்ந்து அமர்ந்துள்ளதால் சிந்தனைகள் அதிகரிக்கும். அடிக்கடி முடிவுகளை மாற்றிக்கொள்வீர்கள். சுபவிஷயமாக பயணங்கள், சந்திப்புக்கள், சந்தோஷங்கள் உண்டு. பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று தரிசிப்பீர்கள். சூரியனின் பார்வை காரணமாக  செல்வாக்கு உயரும். சொன்ன வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். லாபஸ்தான ராகு உங்களுக்கு வெற்றிகளைத் தருவார். வழக்கு சம்பந்தமான சமாதான முடிவுகள் ஏற்படும். தடைபட்டு வந்த கட்டிட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.

பரிகாரம்:

சென்னை புரசைவாக்கம் பாதாள பொன்னியம்மனை தரிசிக்கலாம். பக்தர்களுக்கு பால் பாயாசத்தை பிரசாதமாகத் தரலாம்.

× RELATED சிம்மம்