மாஜி முதல்வர்களுக்கு ஆம்புலன்சும் போச்சு: ஜம்மு காஷ்மீரில் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோருக்கு உள்ள தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்எஸ்ஜி) பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பில் அவர்கள் வெளியே சென்றால், அவர்களுடன் ஆம்புலன்ஸ் மற்றும்  தொலை தொடர்புகளையும், வெடிகுண்டுகளையும் செயழிக்கச் செய்யும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனமும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆம்புலன்ஸ், ஜாமர் வாகன சேவைகளையும் யூனியன் பிரதேச நிர்வாகம் திடீரென திரும்ப பெற்றுள்ளது. உள்ளூரில் மட்டுமே இது நிறுத்தப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசத்தின் மற்ற மாவட்டங்களுக்கு செல்லும்போது இந்த வாகன வசதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது….

The post மாஜி முதல்வர்களுக்கு ஆம்புலன்சும் போச்சு: ஜம்மு காஷ்மீரில் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: