கர்நாடகாவில் ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

பெங்களூரு: கர்நாடகாவில் ஏரியில் குளிக்க சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரு சிறுவன் சேற்றில் சிக்கிய நிலையில் அடுத்தடுத்து காப்பாற்ற சென்ற சிறுவர்களும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் முட்டிகே என்ற கிராமத்தை சேர்ந்த ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகிய 4 சிறுவர்களும் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக திம்மனஹள்ளி ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து கொண்டிருக்கும்போது ஒரு சிறுவனின் கால் சேற்றில் சிக்கிக்கொண்டுள்ளது.

அவரை காப்பாற்றும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக சென்ற சிறுவர்களும் சேற்றில் சிக்கி நீந்த உயிரிழந்தனர். இந்த தகவலை மீதமிருந்த ஒரு சிறுவன் அக்கம்பக்கத்தினரிடம் கூறியபோது, சிறுவன் பொய் சொல்கிறான் என்று எண்ணி அலட்சியமாக அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து தனது சிறுவர்களை காணவில்லை பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது மீதமிருந்த சிறுவன் தனது கிராமமான முட்டிகேவிற்கு சென்று பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து சென்று பார்த்தபோது சிறுவர்கள் உயிரிழந்திருப்பது உறுதியானது.

இதையடுத்து உயிரிழந்த 4 சிறுவர்களின் மீட்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பத்திவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனந்தமாய் விளையாடி குளிக்க சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கர்நாடகாவில் ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: