வேலம்மாள் பள்ளி குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை

சென்னை: ஹரியானாவில் நடைபெற்ற தேசிய இளைஞர்  குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, ஆலப்பாக்கம், வேலம்மாள் வித்யாலயாவின் 5ம் வகுப்பு மாணவர் மாஸ்டர் வி.ஹரிஹரன் கலந்து கொண்டு வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அவர் நேபாளத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச சாம்பியன்ஷிப்பிற்கு அவர் தகுதி பெற்றார். இதில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்குகிறார்.   மேலும் இதே பள்ளியின் மற்றொரு 12ஆம் வகுப்பு மாணவி எஸ்.கனிஷ்கா 3 வது இன்ட்ரா கிளப் லீக் சாம்பியன்ஷிப்பில் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தையும், சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான விருதையும் வென்றார்.மாணவர்களின் சிறப்பான சாதனையைப் பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர், தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்….

The post வேலம்மாள் பள்ளி குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: