அனல் மின் நிலையங்களுக்கான கட்டுப்பாடு விதிமுறை தளர்வு மோசமான விளைவுகள் ஏற்படுத்தும்: ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், நாட்டின் பெரும்பாலான அனல் மின் நிலையங்களுக்கு, சல்பர் டையாக்சைடு கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவும் கட்டாயத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது.ஒன்றிய அரசின் இந்த முடிவால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நுரையீரல் மற்றும் இதய நோய்களுக்கு ஆட்படக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவது, சுற்றுச்சூழல் நீதிக்கும், மக்களின் உடல்நலத்திற்கும் எதிரானதாகும். இதை கண்டிக்கிறேன். பொது மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில். கொண்டு ஒன்றிய அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post அனல் மின் நிலையங்களுக்கான கட்டுப்பாடு விதிமுறை தளர்வு மோசமான விளைவுகள் ஏற்படுத்தும்: ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: