மகா தீபத்தை தரிசிக்க மலை மீது ஏறிய பக்தர் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவையொட்டி கடந்த 3ம் தேதி 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. வரும் 13ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் மலை மீது காட்சி அளிக்கும். ஆனால், மழையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி நேற்று மாலை மலை மீது ஏறிச் சென்ற பக்தர் ஒருவர், சுமார் 500 அடி உயரம் சென்றபோது மூச்சுத் திணறி பலியானார். விசாரணையில், உயிரிழந்தவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்(40) என்பது தெரிய வந்துள்ளது.

Related Stories: