இந்நிலையில் போர் குறித்து கவிஞர் வைரமுத்து தனது கவிதை பாணியில் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,
““உலகின் தலையில்
மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது
அணுகுண்டு
“வக்கிர மனங்களால்
உக்கிரமாகுமோ யுத்தம்”
கலங்குகிறது உலகு
ஈரானின்
அணுசக்தித் தளங்களில்
டொமாஹக் ஏவுகணைகள்வீசி
அவசரப்பட்டுவிட்டது
அமெரிக்கா
வல்லரசுகள்
நல்லரசுகள் ஆகாவிடில்
புல்லரசு ஆகிவிடும்
பூமி
தான் கட்டமைத்த நாகரிகத்தைத்
தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள்
என்ன செய்தன?
போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்
அணுகுண்டு முட்டையிடும்
அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத்
திரும்பட்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
The post வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி : இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து கவிஞர் வைரமுத்து வருத்தம்!! appeared first on Dinakaran.
