முருக பக்தி உணர்வில் அரசியல் ஆதாயம்: முத்தரசன் கண்டனம்

சென்னை: முருக பக்தி உணர்வை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்துவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் மதுரை வண்டியூரில் நடக்கும் மாநாட்டுக்கான பணிகள் அரசியல் கண்ணோட்டத்துடன் உள்ளன. ஆக.24,25ல் இந்து சமய அறநிலையத்துறை சர்வதேச முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என முத்தரசன் கேள்வி எழுப்பினார். அரசியல் ஆதாயம் தேடும் குறுக்கு பார்வை கொண்டோரின் மாநாட்டை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

The post முருக பக்தி உணர்வில் அரசியல் ஆதாயம்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: