கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மருதமலை அருகே ஐஓபி காலனியில் மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் கீழே விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.