செம்பரம்பாக்கம் ஊராட்சியில் 100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள்

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் 426 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் கிராமம் தோறும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகள், பேரணி நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் மேற்பார்வையில், பூந்தமல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) கோ.மகேஷ்பாபு, (கி.ஊ.) சுந்தராஜன் ஆகியோர் தலைமையில் வண்ண, வண்ண கோலம் வரைந்து உறுதிமொழியை எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதில் உதவி செயற்பொறியாளர் மாரிச்செல்வம், துணை வட்டாட்சியர் அரிபாபு, சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம், ஊராட்சி செயலர் தேன்மொழி, தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: