ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8327 கனஅடியில் இருந்து 13667 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.62 அடியாகவும், நீர் திறப்பு 105 கன அடியாகவும் உள்ளது.