மார்த்தாண்டம், மே 16: மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குறிப்பிட்ட பகுதியில் தடையை மீறி கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதையடுத்து லாரியை மடக்கிப்பிடித்த போலீசார், கனரக வாகனம் வந்து செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதியில் லாரியை ஓட்டியதாக டிரைவர் பரக்குன்டு மணிவீனை பகுதியை சேர்ந்த ராம் (42) என்பவரை பிடித்தனர். உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
The post மார்த்தாண்டம் அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் லாரி ஓட்டிய டிரைவர் கைது appeared first on Dinakaran.
