திருப்பூர்,ஜன.10: திருப்பூர் ரயில்வே எஸ்.ஐ சுப்பிரமணி தலைமையிலான போலீசார், ரயில் நிலைய பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வந்தது. இந்த ரயிலின் பின்பக்க முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
