அவிநாசி அருகே விறகு லாரி கவிழ்ந்து விபத்து

அவிநாசி, ஜன.10: அவிநாசி அருகே விறகு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி விறகு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த தெக்கலூர் நல்லிக்கவுண்டம்பாளையம் பிரிவு புறவழிச்சாலை அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், டிரைவர் மற்றும் உதவியாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். விறகுகள் சாலையில் கொட்டி சிதறியதால் கோவை-சேலம் புறவழிச்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இதையடுத்து அவ்வழித்தடத்தில் போக்குவரத்து சீரானது.

 

Related Stories: