மாடு திருட வந்த இருவர் சிக்கினர்

திருமங்கலம், ஜன. 10: திருமங்கலம் சோழவந்தான் ரோடு வீரராகவன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியரான இவர் ஐந்து பசுமாடுகள் வளர்த்து பால் வியாபாாரம் செய்து வருகிறார். இவர் நேற்று வீட்டினை பூட்டிவிட்டு பால் வியாபாரத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டின் மாடியில் ஏறி பதுக்கி இருந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் சிக்கிய நிலையில் மற்றொருவர் தப்பினார்.

பின்னர் பிடிபட்ட நபரை திருமங்கலம் டவுன் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் வாடிப்பட்டியை சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது. இவருடன் வந்திருந்த சூரியகாளை என்பவரும் போலீசாரிடம் சிக்கினார். இவர்கள் இருவரும் இளங்கோவன் வீட்டில் இருக்கும் மாடுகளை திருடிச்செல்ல வந்ததாக கூறினர். வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

 

Related Stories: