ஈரோடு, ஜன.10: ஈரோடு-சத்தி ரோடு, சூளை பகுதியில் வடக்கு போலீசார் நேற்று முன் தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பேக்கரியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான பெரிய சேமூர், சக்தி நகர் பகுதியை சேர்ந்த துரைசாமி (56) ஆகியோரை கைது செய்தனர். 1.347 கிலோ கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல மொடக்குறிச்சி எழுமாத்தூர் பகுதியில் மளிகை புகையிலையை விற்பனை செய்த பிரசாந்த் (20) என்பவரை கைது செய்து 320 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தனர். சிவகிரி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்த கல்யாணசுந்தரம் (49) என்பவரை கைது செய்து 15 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
