சென்னை: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் ஜூலை 14ம் ேததி ரிலீசாகிறது. இந்நிலையில் படத்துக்கான டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியானது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 29ம் தேதி சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது அந்த பணிகளை நிறைவு செய்திருக்கிறார். தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதற்காக அவர் தாடி வளர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post மாவீரன் டப்பிங் பணியை முடித்தார் சிவகார்த்திகேயன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.