வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உழவர்களின் மேம்பாட்டிற்காக 4 பேருக்கு பவல் டில்லர், நாற்று நடவு செய்யும் இயந்திரம், விசை களையெடுப்பான், டிராக்டர் ஆகியவை 15 லட்சத்து 8 ஆயிரத்து 79 ரூபாய் மதிப்பீட்டில் 59 ஆயிரம் ரூபாய் அரசு மானியத்துடனும், 2023-24ம் ஆண்டிற்கான மாநில அளவில் சிறப்பாக சாகுபடி செய்த 11 விவசாயிகளுக்கு உதவிகளும் வழங்கப்பட்டது. 15 பேருக்கு பட்டா, 52 பேருக்கு சுய உதவிக் குழு கடன் உதவி, அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் 59 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 20 பேருக்கு வீட்டுவசதி கடன், 4 பேருக்கு திருமண உதவித் தொகை, ஓய்வு பெற்ற 8 பேருக்கு நிதியுதவிகள், இயற்கை மரணம் அடைந்த 14 பேருக்கு நிதி உதவிகளும், விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு நிதி உதவி என 390 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தி.மு.க அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பல்வேறு துறைகளின் சார்பில் 390 பேருக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.
