3 மணி நேரத்துக்கு ஒரு காவலர் என ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நேற்று திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மதன்குமார் (25) காலை நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்தார்.அப்போது வங்கி பணியாளர்கள் பணம் வைக்கும் மையத்தின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது மதன்குமார் இறந்து கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான காரைக்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை வந்தபிறகே மதன்குமார் இறந்ததற்கான காரணம் தெரியவரும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வங்கி பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் மர்ம மரணம் appeared first on Dinakaran.
