சித்திரை பிரம்மோற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் தேரோட்டம் தொடக்கம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளான இன்று தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு மாவட்ட சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரிஸ்வரர் கோவில் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த கோயில் அப்பர், சுந்தார், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என நால்வரால் பாடப்பெற்ற தலமாக விளங்குகிறது. சித்திரை திருவிழா சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொங்கிய நிலையில் முக்கிய திருவிழாவான 7-ம் நாள் தேரோட்டம் இன்று நடைபெற்றது. வேருகிரமா கிரிப் புரசுந்தரி அம்மன் கிழக்கு ராஜகோபுர வழியாக வெளியே வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முன்னதாக வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது மற்றும் காவல்துறை சார்பில் மாமல்லபுரம் டிஎன்பி ஜெகதிஸ்வரன் உத்தரவின் பேரில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்கர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சித்திரை பிரம்மோற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் தேரோட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: