காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் தேசிய வங்கியின் மண்டல அலுவலகம் மற்றும் அதன் கீழ் பகுதியில் அனைத்து வங்கிகளின் பணம் வைக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் 3 மணி நேரத்துக்கு ஒருவர் என ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நேற்று திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மதன்குமார் (25) காலை நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வங்கி பணியாளர்கள் பணம் வைக்கும் மையத்தின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கு மதன்குமார் இறந்து கிடந்துள்ளார். இதுகுறி்து காரைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post வங்கியில் போலீஸ்காரர் மர்ம மரணம் appeared first on Dinakaran.