மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மின்னலாய் மின்னிய மிர்ரா காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டிகளில் நேற்று, மிர்ரா ஆண்ட்ரீவா, கோகோ காஃப், அலெக்சாண்ட்ரோவா ஆகிய வீராங்கனைகள் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில், ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோதுப்சேவா மோதினர்.

இந்த போட்டியில் எந்தவித சிரமும் இன்றி அநாயாசமாக ஆடிய மிர்ரா, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் யூலியாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்னொரு போட்டியில் ரஷ்ய வீராங்கனை ஏகதெரினா அலெக்சாண்ட்ரோவா, 6-3, 7-6 என்ற நேர் செட்களில், ஆஸ்திரேலியா வீராங்கனை டாரியா கசத்கினாவை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

 

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மின்னலாய் மின்னிய மிர்ரா காலிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: