இதில் படகின் முன்பகுதி பலகை சேதம் அடைந்தது. தொடர்ந்து இலங்கை கடற்படையினர், நாட்டுப்படகில் ஏறி அதில் இருந்த 7 மீனவர்களையும் கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் மீனவர்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், கடிகாரம் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் ஆகிய 4 மீனவர்கள் வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வேதாரண்யம் கடலோர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post கோடியக்கரை அருகே அதிர்ச்சி சம்பவம்.. தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!! appeared first on Dinakaran.