சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிர்வாகம் இப்பகுதி மக்களிடம் நிரந்தர வேலை கொடுக்கிறோம் என கூறி, வீடு மற்றும் நிலங்களை வாங்கினார்கள். ஆனால் இவர்களை வேலைக்கு எடுத்து ஒப்பந்த பணியாளர்களாகவே பணிபுரிந்து வருகிறார்கள். வீடு நிலம் கொடுத்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஒப்பந்த தொழிலாளர்களே தங்கள் கோரிக்கைக்காக பல கட்ட போராட்டங்களை நடத்துவதால், என்எல்சி நிர்வாகம், நிர்வாகத்தின் முன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு உயர்மட்ட குழு ஒன்றை 6 மாதத்திற்குள் அமைத்து, தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் என்எல்சி நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தியுள்ளது. எனவே அதை அமல்படுத்த வேண்டும்.
The post உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனே அமல்படுத்த வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.