நாள்தோறும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை: என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு என சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

The post நாள்தோறும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: