தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 274 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 424 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 107.59 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 107.53 அடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 74.94 டிஎம்சியாக உள்ளது.
The post ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கனஅடி appeared first on Dinakaran.