சென்னை: சென்னையில் சிறுவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் ஜவுளிக்கடை மேலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சிறுவர்கள் 4 பேர், +2 தேர்வு முடிந்த நிலையில் கோடம்பாக்கத்தில் ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்தனர். மாணவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்த கைப்பையில் இருந்து தவறுதலாக ரூ.300 பணத்தை எடுத்ததாக தெரிகிறது. மேலாளர்கள் கவியரசன், சேக் அலாவுதீன் ஆகியோர் சிறுவர்களை அறைக்குள் பூட்டி பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியுள்ளனர். செல்போனையும் பறித்து “கூகுள் பே” மூலம் ரூ.10,500ஐ பறித்துக் கொண்டு சிறுவர்களை விரட்டியுள்ளனர்.
The post சென்னையில் சிறுவர்கள் மீது தாக்குதல்: ஜவுளிக்கடை மேலாளர் 2பேர் கைது appeared first on Dinakaran.