சென்னை: ஒடிஸா மாநிலம் ராய்க்கடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த சரண்ராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.