அவர் தனது வீட்டில் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் அளித்த புகாரில் காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஜான் ெஜபராஜ் தலைமறைவானார். அவரை பிடிக்க கோவை மாநகர கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர் பெங்களூருவில் இருந்து வெளிநாடு தப்பிச்செல்ல முயல்தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி வைத்தனர். சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் சார்பில் அவரது வழக்கறிஞர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதே நேரத்தில், தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஜான் ஜெபராஜ் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மூணாறில் உள்ள ஒரு பாதிரியார் வீட்டில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் அங்கு சென்று ஜான் ஜெபராஜை மடக்கி பிடித்து கைது செய்து கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள மகிளா கோர்ட் நீதிபதி நந்தினிதேவி வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர். வரும் 25ம் தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது appeared first on Dinakaran.