கூடுவாஞ்சேரி, ஏப்.11: கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம், ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வராஜ்.இவரது மகன் சோஜன்(11). இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டிலிருந்து தனது நண்பர்கள் 4 பேருடன் ஆதனூர் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் சோஜனின் நண்பர்கள் 4 பேர் மட்டும் வீடு திரும்பியுள்ளனர்.
ஆனால் சோஜன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மணிமங்கலம் காவல் நிலைய போலீசார் மற்றும் படப்பை தீயணைப்புத் துறையினர் ஏரியில் இருந்து சிறுவனை சடலமாக மீட்டனர். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post சிறுவன் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.