திருப்போரூர் தாலுகாவில் பொங்கல் பரிசு வழங்கும் பணி

திருப்போரூர், ஜன.9: திருப்போரூர் தாலுக்காவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவு கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். வங்கி செயலாளர் ஞானவேல் வரவேற்றார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் ஆகியோர், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி பேசினர்.

இதேபோல் கேளம்பாக்கம், படூர், கோவளம், சிறுசேரி, புதுப்பாக்கம், நாவலூர், முட்டுக்காடு, தண்டலம், செம்பாக்கம், ஆலத்தூர், பையனூர் உள்ளிட்ட 50 ஊராட்சிகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் ஒன்றிய குழு துணை தலைவர் சத்யா சேகர், பேரூராட்சி துணை தலைவர் பரசுராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், படூர் தாரா சுதாகர், நாவலூர் மகாலட்சுமி ராஜாராம், முட்டுக்காடு சங்கீதா மயில்வாகனன், கோவளம் சோபனா தங்கம் சுந்தர், சிறுசேரி தேவராஜன், துணைத்தலைவர் ஏகாம்பரம், மாவட்டக்குழு துணைத்தலைவர் காயத்ரி அன்புச்செழியன், ஒன்றியக் குழு
உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

திருப்போரூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் 11 கூட்டுறவு கடைகளில் மட்டும் 8892 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை ஆகியவை வழங்கும் பணி தொடங்கியது. அதேபோன்று, திருப்போரூர் வட்ட அளவில் மொத்தமுள்ள 50 கூட்டுறவு கடைகளில் 55,078 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக திருப்போரூர் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார். மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சியை காஞ்சிபுரம் எம்பி செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். இதில், திமுக 5வது வார்டு கவுன்சிலர் மோகன் குமார், 9வது வார்டு கவுன்சிலர் பூபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: