கோவை: மருதமலையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி வேல் திருடிய சாமியாரை போலீசார் இன்று கைது செய்தனர். கோவை மருதமலை முருகன் கோயிலில் கடந்த 4ம் தேதி குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. முருகனை வேல் ரூபத்தில் வழிபடுகின்றனர். சாமிக்கு முன்பு 2.5 அடி உயரத்தில் ரூ.4 லட்சம் வெள்ளி வேல் வைக்கப்பட்டிருந்தது. இந்த வேல் கடந்த 2ம் தேதி திடீரென மாயமானது. இதனை அறிந்த கோயில் நிர்வாகத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் 2ம் தேதி நண்பகல் 12 மணி அளவில் சாமியார் ஒருவர் வெள்ளி வேலை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. இதனையடுத்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை திருடிச்சென்ற சாமியாரை தேடிவந்தனர். இந்நிலையில் வேலை திருடியது நாடோடியாக சுற்றித்திரிந்த சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) என தெரியவந்தது. இதனையடுத்து கோவையில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். சாமியாரே வேலை திருடிய சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கோவை மருதமலை கோயிலில் வேல் திருடிய சாமியார் கைது appeared first on Dinakaran.