சீனாவுடன் வரிவிதிப்பு யுத்தம் செய்யும் அமெரிக்கா: அதிபர் ஜின்பிங்கை அறிவார்ந்த அதிபர் என டிரம்ப் பாராட்டு

வாஷிங்டன்: ஒரு புறம் சீனாவுடன் வரிவிதிப்பு யுத்தம் செய்யும் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்கை அறிவார்ந்த நபர் என பாராட்டியுள்ளார். சீனா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீதான வரியை 125% ஆக டிரம்ப் உயர்த்தி இருக்கும் நிலையில் ஜின்பிங்கை பாராட்டி உள்ளார். சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் மீதான வரியை அமெரிக்கா 104%ஆக உயர்த்தியவுடன் சீனாவும் பதிலடி கொடுத்தது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் மீதான வரியை 84%ஆக உயர்த்தி சீனா அறிவித்தது. உடனே, சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்கள் மீதான வரியை டிரம்ப் 125% ஆக உயர்த்தி உள்ளார். என்ன செய்ய வேண்டும் என்பது சீன அதிபர் ஸி-க்குத் தெரியும், தன்நாட்டை நேசிப்பவர் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், விரைவில் அவரிடம் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும், போட்டிகள் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் பேட்டி அளித்தார்.

 

The post சீனாவுடன் வரிவிதிப்பு யுத்தம் செய்யும் அமெரிக்கா: அதிபர் ஜின்பிங்கை அறிவார்ந்த அதிபர் என டிரம்ப் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: