சென்னை: சென்னை அண்ணா நகரில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 6வது நிழற்சாலையில், காரின் கதவை திறக்கும் போது, சைக்கிளில் வந்த நபர் கதவில் மோதி சாலையில் விழ, பின்னால் வந்த வேறு கார் தலையில் ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றிய அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.