முத்துப்பேட்டை,ஏப். 9: முத்துப்பேட்டை, கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்து இரவு பெருமாளுக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. சீர் வரிசையுடன் கலந்து கொண்ட பக்தர்கள் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுக்கா கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு பெரியநாயகி சமேத அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில் மிகப்பழமையானது. இத்திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தகைய சிறப்பு மிக்க இத்திருக்கோயிலின் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாலை நவகலச ஸ்தாபனம், மஹா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்து இரவு பெருமாளுக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசைகள், அறுசுவை விருந்து, மணமகன் மணமகள் தனி தனியாக மொய் உள்ளிட்ட திருமண வழக்கமுறைகள் என பெண் மாப்பிளை திருமணம் போன்று தத்துருபமாக அனைத்தும் நடத்தி வழிபாடுகளும் செய்து இருந்தனர்.
இதனை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வழிபட்டனர்.அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்களால் எடுத்து செல்லப்பட்ட சாமிகள் கோவிலூர் கிராமம் முழுவதும் முக்கிய வீதிகளின் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. அதற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ச்சியாக திரைப்பட பாடகர் வேல்முருகனின் சிறப்பு கச்சேரி நடைபெற்றது.
இந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திருப்பணி குழு துணைத்தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், எம.எஸ்.கார்த்திக், பொருளாளர் கௌதமன் துணைச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, இரவி மற்றும் அறநிலையத்துறை சார்பில் உதவி ஆணையர் சொரிமுத்து, ஆய்வாளர் இராஜேந்திரபிரசன்னா, கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் திருப்பணிகள் குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
The post முத்துப்பேட்டை, கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவம் appeared first on Dinakaran.