திருவாரூர், ஏப். 9: ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழகங்களில் வேந்தரானது ஆகியவற்றிற்காக திருவாரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராகதமிழக அரசு மூலம் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது தவறு, பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்ததும் தவறு என்று தீர்ப்பு அளித்துள்ளதுடன் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது, மாநில அரசின் ஆலோசனை படியே செயல்பட வேண்டும்என்பது உட்பட தங்களதுதீர்ப்பில் பல்வேறு தகவல்களை நீதிபதிகள் தெரிவித்துள்ளதுடன் தமிழ்நாடு அரசு மூலம் அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த வகையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவார் என்ற மசோதாவும் நிறைவேறியுள்ள நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் முதல்வர் பல்கலைக்கழகங்களின் வேந்தரானது ஆகியவற்றிற்காக மாநிலம் முழுவதும் திமுகவினர் நேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதன்படி மாவட்டத்தில், திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி பகுதி திமுகவினர், மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் திமுகவினர் பழைய பேருந்து நிலையம் முன்பாக வெடி வெடித்து பொதுமக்களுக்கு இணைப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் செந்தில், விவசாய தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர் சங்கர், நகராட்சி தலைவர்கள் திருவாரூர் புவனபிரியா செந்தில், திருத்துறைப்பூண்டி கவிதா பாண்டியன் கூத்தாநல்லூர் பாத்திமா பஷீரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில்ஒன்றிய முன்னாள் தலைவர்செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், கவியரசு, பேரூராட்சி தலைவர் ராமராஜ், பொதுக்குழு உறுப்பினர் கமாலுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு; திமுகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.