அதோடு மட்டுமல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்த நிதியை தற்போது இரண்டரை லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கின்றார். உறுப்பினர் கோரிய மதுரைவீரன் கோயிலுக்கும் நிதி வழங்கப்பட்டு பணிகள் ஒரு மாதத்திற்குள்ளாக முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்கள் மற்றும் கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணி செய்ய வேண்டி இருந்தால் அதற்கான பட்டியலை தாருங்கள்.
அதையும் இணைத்துக்கொண்டு திருப்பணி செய்து தருகிறோம். இதுவரை 5,000 ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்கள் மற்றும் 5,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முதல்வர் தலா ரூ.106 கோடி வீதம் ரூ.212 கோடியினை இந்த திராவிட மாடல் ஆட்சியில் வழங்கி இருக்கின்றார் என்றார்.
The post ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.212 கோடி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.
