இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் “2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக இணைந்து சந்திக்கும்” என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது; “2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக இணைந்து சந்திக்கும். அதிமுக – பாஜக கூட்டணியில் ஒத்த கருத்துள்ள பிற கட்சிகளும் இடம்பெறும். அதிமுகவும் பாஜகவும் 1998 முதல் கூட்டணியை அமைத்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.
அதிமுக – பாஜக கூட்டணி என்பது இயல்பானது. கூட்டணியில் இணைய அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. டிடிவி தினகரன், ஓபிஎஸ் அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதில் பாஜக தலையிடப் போவதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்திருப்பது அந்தக் கட்சிக்கும் பாஜகவுக்கும் பலன் தரக்கூடியது. தற்போதைக்கு எடப்பாடியின் சீறிய தலைமையில் இக்கூட்டணி அமைகிறது.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்போமா? என்பதெல்லாம் பின்னர் முடிவு செய்யப்படும். அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக இருக்கும்; எங்களிடையே குழப்பம் ஏதும் இல்லை. நீட் விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். அதிமுக கூட்டணிக்காகவே அண்ணாமலை மாற்றப்பட்டதாக கூறுவது தவறு” என தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பையடுத்து அமித் ஷா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு செல்கிறார். எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அமித் ஷாவுக்கு இரவு விருந்து அளிக்க உள்ளார்.
The post 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக இணைந்து சந்திக்கும்: அமித் ஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.