ஈரோடு,ஏப்.5: தமிழக மக்கள் நல கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூரம்பட்டி, 2ம் நம்பர் பஸ் ஸ்டாப் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், ஈரோடு, சூரம்பட்டி பகுதியில் உள்ள சாயத் தொழிற்சாலையில் இருந்து, கழிவு நீரை சுத்திகரிக்காமல் சாக்கடையில் வெளியேற்றுகின்றனர். இதுகுறித்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அந்த சாயத் தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
The post சாய தொழிற்சாலை மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.