ஈரோடு, மார்ச் 28: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பெண் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி அளித்திடவும் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இக்குழுவின் சார்பில் நம்பியூர் ஒன்றியத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான குமுதா கல்வியியல் கல்லூரியிலும், தாளவாடி ஒன்றிய மாணவிகளுக்கு டான் போஸ்கோ பள்ளியிலும் எளிய அறிவியல் செயல்முறை விளக்க நிகழ்ச்சி லைம்ஸ் நிறுவனத்தினரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், உயர் கல்வி கற்பதினால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சண்முகவடிவு, நம்பியூர் மற்றும் தாளவாடி ஒன்றியத்தில் உள்ள நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.