ஈரோடு,ஏப்.4:ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வரும் 8ம் தேதி எள் ஏலம் நடைபெறவுள்ளது.தொடர்ந்து, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஏலம் மூலமாக எள் விற்பனை நடைபெறும். எனவே, எள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ள விவசாயிகள்,அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தங்களது எள்ளை ஏலம் மூலமாக விற்பனை செய்து பயன்பெறலாம். எள்ளை விற்பனைக்கு வரும்போது,விவசாயிகள் தங்களது வங்கி பாஸ் புத்தக நகல், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
The post அவல் பூந்துறையில் 8ம் தேதி முதல் எள் ஏலம் appeared first on Dinakaran.