இந்நிலையில், கடந்த 12 வருட திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தங்களது பிரச்னையால் ஏற்கனவே சில காலம் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இதையடுத்து, இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி கடந்த மாதம் 24ம் தேதி நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரிய மனுவை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் அன்று நேரில் வரும் பட்சத்தில் விவாகரத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் செப்.25ல் நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.