வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்காக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்காக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வனப்பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அந்நிய மரங்களை அகற்ற சிப்பர் மற்றும் பல்வரீஷ் என்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நவீன இயந்திரங்கள் மூலம் அந்நிய மரங்களான உன்னி செடி வகைகளை அப்புறப்படுத்தி, துகள்களாக மாற்றி அகற்றம்.

கிராமப் பகுதிக்குள் வனவிலங்கு-மனித மோதலை தடுக்க ஏபிசி எனப்படும் ஏரியல் பஞ்ச் கேபிள் என்ற நவீன முறை அறிமுகம். கூடலூர் பகுதி தொரப்பள்ளி முதல் தெப்புக்காடு வரை நவீன மின் பகிர்மான முறை கொண்டுவரப்பட்டுள்ளது. விலங்குகள் கிராமத்திற்குள் வரும்போது மின்கம்பியில் உரசும்போது, அந்த பகுதியில் மின் துண்டிப்பு ஏற்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

The post வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்காக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: