இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழகத்தில் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் 77 சுங்கச்சாவடிகள் உள்ளது. சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்ப பெறுமாறு ஏற்கனவே ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். நேரில் சென்றும் அதுபற்றி வலியுறுத்த உள்ளோம். காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி ஒன்றிய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் ஒன்றிய அரசு சார்பில் காலாவதியான சுங்கச்சாவடிகள் இருக்கும் சாலைகளில் சிறிய மேம்பாலங்கள், சாலை மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால் அவை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இனி காலாவதியான சுங்கச்சாவடிகள் என்பதே கிடையாது என்று ஒன்றிய அரசு பதில் அனுப்பி உள்ளது.
இதன் காரணமாகவே காலாவதியான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசிடம் நேரில் வலியுறுத்தும்போது காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவும் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post காலாவதியான சுங்கச்சாவடி என்று தமிழ்நாட்டில் எதுவும் இல்லை: ஒன்றிய அரசு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது appeared first on Dinakaran.