கச்சத்தீவு மீட்பு தொடர்பான விவகாரத்தில் திமுக கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு: செப்.15ல் வழக்கு விசாரணை

புதுடெல்லி:இந்தியா, இலங்கை இடையான 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது செல்லாது என அறிவிக்க கோரி கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க பொதுச்செயலாளர் மறைந்த ஜெயலலிதா, மற்றும் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேப்போன்று இந்த வழக்கில் திமுக தலைவர் மறைந்த கலைஞர் தரப்பிலும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

மேற்கண்ட வழக்குகள் கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘‘தி.மு.க தலைவர் கலைஞர் மறைந்துவிட்டதால், திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவை மனுதாரராக உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்று கூறினார்.

அதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘‘வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 15 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் கச்சத்தீவு மீட்பு தொடர்பான வழக்குகள் அனைத்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.

The post கச்சத்தீவு மீட்பு தொடர்பான விவகாரத்தில் திமுக கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு: செப்.15ல் வழக்கு விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: