அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தி குறித்து சர்ச்சை கருத்தை கூறினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கொறடா ஜெய்ராம் ரமேஷ், அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்காரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதில், ‘‘காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்தது. காங்கிரஸ் தலைவர் அதில் உறுப்பினராக இருந்தார். காங்கிரஸ் தலைவர் அரசு நிதியின் ஒரு பகுதியாக இருந்தார். அவர்கள் அரசுக்கு என்ன பதில் அளிப்பார்கள் என்று தெரிவித்தார். காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி மீது உள்துறை அமைச்சர் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நான் நோட்டீஸ் சமர்பிக்கிறேன் ” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: