தமிழ்நாட்டிற்கு 23 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை சப்ளை வேண்டும்: திமுக எம்பி வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு 23 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை சப்ளை செய்ய வேண்டும் என்று திமுக எம்பி கேஆர்என் ராஜேஷ்குமார் வலியுறுத்தினார். மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என். ராஜேஷ்குமார் நேற்று பேசும் போது,’ தமிழ்நாட்டிற்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மூலம் மாதம் தோறும் 8,576.02 மெட்ரிக் டன் கோதுமை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதை 23 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா நேற்று பேசியதாவது: தமிழ்நாடு பல ஆண்டுகளாக மாற்றாந்தாய் மனப்பான்மையை எதிர்கொண்டு வருகிறது. எங்களுக்கு போதுமான பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்படுவதில்லை. வரி பகிர்வும் முறையாக வழங்கப்படுவதில்லை. திட்ட ஒதுக்கீடுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றன. இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கும் புறக்கணிப்பின் வடிவமாக ஒன்றிய அரசு பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் சமமான நிதிக் கொள்கையை கடைபிடிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டாயம் மட்டுமல்ல, நாட்டின் சீரான வளர்ச்சிக்கும் அவசியம்.
இவ்வாறு கூறினார்.

* நக்சல் வன்முறை: நாடு முழுவதும் நக்சல் வன்முறை 81 சதவீதம் குறைந்து விட்டதாகவும், நக்சல்களால் உயிரிழப்பு 85 சதவீதம் குறைந்து விட்டதாகவும் மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டிற்கு 23 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை சப்ளை வேண்டும்: திமுக எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: